Sunday, November 24, 2013


முக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:
சாதி தொழில்
பிராமணர் கோயில்களில் பூசை செய்தல், குறிப்பிட்ட சில சாதியினரின் வீடுகளில் நடைபெறும் கிரியைகளை நடத்துதல்.
வெள்ளாளர் நில உடைமையாளர் / வேளாண்மை
செட்டிகள் வணிகம்
சிவியார் சிவிகை காவுதல்.
செம்படவர் மீன் பிடித்தல்
சான்றார் எண்ணெய் உற்பத்தி
கன்னார் பித்தளைப் பாத்திரங்கள் செய்தல்.
தட்டார் பொன் அணிகள் செய்தல்
கரையார் மீன்பிடித்தல், கப்பலோட்டுதல்
முக்கியர் -
திமிலர் மீன்பிடி வள்ளம் கப்பல் செய்தல்
வண்ணார் துணி வெளுத்தல்
தச்சர் மரவேலை
சேணியர் துணி நெய்தல்
குயவர் மட்பாண்ட உற்பத்தி
கொல்லர் இரும்பு வேலை
அம்பட்டர் முடி வெட்டுதல்
கோவியர் -
நளவர் மரம் ஏறுதல், கள் உற்பத்தி
பள்ளர் வேளாண்மை தொழிலாளர்
பறையர் பறையடித்தல்
உரிமைகளும் கட்டுப்பாடுகளும்
யாழ்ப்பாண அரசர் காலத்திலும், பின்னர் ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சிக் காலத்திலும்கூட வெவ்வேறு சாதிகளுக்கான வேறுபட்ட உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இவை வாழிடம், ஆடை அணிகள், தலை அலங்காரம், மண நிகழ்வு, மரண நிகழ்வு போன்ற பலவற்றையும் தழுவி அமைந்திருந்தன.
வாழிடம் தொடர்பில், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய நல்லூர் நகர் பற்றி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்:
நல்லூர் நகரத்திலே ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வீதியிருந்ததென்பது தெரிகின்றது. அந்தணர்க்குகொரு தெருவும், செட்டிகளுக்கொரு தெருவும், வேளாளர்க்கொரு தெருவும், கன்னாருக்கொரு தெருவும், தட்டாருக்கொரு தெருவும், கைக்கோளர்க்கொரு தெருவும், சாயக்காரருக்கொரு தெருவும், உப்புவாணிகருக்கொரு தெருவும், சிவிகையார்க்கொரு தெருவுமாக இப்படி அறுபத்துநான்கு தெருக்களிருந்தன. இந்நகரத்தினுள்ளே ........ அம்பட்டர், வண்ணார், பள்ளர், நளவர், பறையர், துரும்பர் முதலியோர்க்கு இருக்கையில்லை. அவரெல்லாம் புறஞ்சேரிகளிலேயே வசித்தார்கள்.
மணவீடு, மரணவீடு போன்றவற்றில் வெவ்வேறு சாதிகள் பயன்படுத்த உரிமையுள்ள இசைக்கருவிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன:

சாதிகளும் தொழில்களும்
சாதி மணவீடு மரணவீடு -
பிராமணர் மேளவாத்தியம் - -
வெள்ளாளர் மேளவாத்தியம் பறைமேளம் நிலபாவாடை, சங்கு, தாரை, குடமுழவு, மேற்கட்டி என்பவற்றுக்குன் உரிமையுண்டு
செட்டிகள் மேளவாத்தியம் பறைமேளம் நிலபாவாடை, சங்கு, தாரை, குடமுழவு, மேற்கட்டி என்பவற்றுக்குன் உரிமையுண்டு
கோவியர் மேளவாத்தியம் பறைமேளம் -
மறவர் மேளவாத்தியம் பறைமேளம் -
அகம்படியர் மேளவாத்தியம் பறைமேளம் -
இடையர் மேளவாத்தியம் பறைமேளம் -
சிவியார் மேளவாத்தியம் பறைமேளம் -
ஆண்டிகள் - சங்கு -
முக்கியர் - ஒற்றைச்சங்கு -
கரையார் - ஒற்றைச்சங்கு -
கம்மாளர் - சேகண்டி, குடமுழவு -
குயவர் - குடமுழவு -
அம்பட்டர் - தாரை -
வண்ணார் - தாரை -
சாதிகளுக்கு இடையேயான தொடர்புகள்

யாழ்ப்பாணத்துச் சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவற்றுக்கிடையேயான பொருளாதாரத் தொடர்புகள் முதன்மையானவை. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்துச் சாதிகளை நான்கு பிரிவுகளாக வகுக்கமுடியும் என கென்னத் டேவிட் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி  எழுதியுள்ளார். அப்பிரிவுகள் பின்வருமாறு:
கட்டுள்ள சாதிகள் (bound castes)
பிராமணர், வெள்ளாளர், கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் முதலானோர்.
கட்டற்ற சாதிகள் (unbound castes)
செட்டிகள், தட்டார், கைக்குளர், சேணியர், முக்கியர், திமிலர் முதலானோர்.
பிரதானமாகக் கட்டுள்ள கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
பண்டாரம், நட்டுவர்
பிரதானமாகக் கட்டற்ற கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
கரையார், கொல்லர், தச்சர், குயவர்
கட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், நில உடைமையாளரான வெள்ளாளரின் கீழ் அவர்களுக்குச் சேவகம் செய்து வாழுகின்ற ஒரு நிலை இருந்தது. இது குடிமை முறை என அழைக்கப்பட்டது. இம் முறையின் கீழ் பணம் படைத்த வெள்ளாளர் குடும்பங்கள், தங்களுக்குக் கீழ் கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களைத் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்து வேலை செய்வித்தனர். இக் குடும்பங்கள் குறித்த வெள்ளாளக் குடும்பங்களின் சிறைகுடிகள் எனப்பட்டன.



0 comments:

Post a Comment